கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், காட்பாடி சந்திப்பு, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில்வே நிலையங்கள் மறுசீரமைப்புக்காக அண்மையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து இதில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி ரயில்வே நிலையத்தை உலக தரம் வாய்ந்த விமான நிலையம் போன்ற ஒரு நவீன வசதியுடன் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக கன்னியாகுமரி ரயில்வே நிலையம் மறு சீரமைப்புக்காக 49.36 கோடி ரூபாய் மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான டெண்டர் பணிகளும் முடிவடைந்ததாக ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான ஆய்வு பணிகள் முடிந்ததும், இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.