இது தொடர்பாக அவர் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் உள்ள 13 கடற்கரை மாவட்டங்களில் மீன் அத்தியாவசிய உணவாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை உள்ளதால் கடற்கரையோர கிராம மக்கள் மீன் உணவு கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
கடலில் மீன்பிடிக்க அனுமதி கொடுங்கள் - முதலமைச்சருக்கு வேண்டுகோள்! - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணி முதலமைச்சர் பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நமது அருகாமை மாநிலமான கேரளாவில் மக்களின் அத்தியாவசிய உணவான மீன் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் உள்ள 13 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு மீன் உணவு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்காக கடலில் அன்றாடம் மீன் பிடித்து வரும் வகையில் கட்டுமரம், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இவ்வாறு பிடித்து வரப்படும் மீனை அரசின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றி வியாபாரம் செய்வோம் எனவும் உறுதியளிக்கிறோம். எனவே தமிழ்நாடு அரசு கட்டுமரம், நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.