கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுதலை தடுக்கவும், கடல் வழிக் குற்றங்களை கண்காணிக்கவும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு நான்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டன.
இந்த அதிநவீன படகுகள் மூலம் தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் முதல் குமரி மாவட்டம் குளச்சல் வரையிலான கடலோர பகுதியை கண்காணிக்கும் பணியில் மெரைன் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த நான்கு அதிநவீன படகுகளும் பழுதானதால் மீனவர்களிடம் இருந்து வாடகைக்கு படகை எடுத்து கடலோர பகுதிகளை மெரைன் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், பழுதான படகுகளில் 2 நவீன படகுகள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.