கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கரோனா தொற்று காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. நாகராஜா கோயிலில் இந்நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் 13 அடி உயரம் கொண்ட சூரன் சிலை அமைக்கப்படும். ஆனால், இம்முறை 5 அடி அளவு கொண்ட சூரன் சிலை அமைக்கப்பட்டது.
அதன் மீது வழக்கமாக சூரபத்மன், சிங்கன், தாரகன், அஜமுகி என நான்கு தலைகள் பொருத்தப்படும். இந்த ஆண்டு கரோனா காரணமாக சூரபத்மன் தலை மட்டுமே பொருத்தப்பட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.