தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67வது ஆண்டு விழா கொண்டாட்டம் - 67வது ஆண்டு விழா

துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்து அவர்களின் தியாகத்தில் 1956 நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67வது ஆண்டு விழா கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67வது ஆண்டு விழா கொண்டாட்டம்

By

Published : Nov 1, 2022, 6:20 PM IST

கன்னியாகுமரி பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானமான கேரளாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1945க்கு பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டம் தொடங்கியது. இதில் மார்ஷல் நேசமணி தலைமை தாங்கிய பின்னர் போராட்டங்கள் அதிகரித்தது.

இதில் கேரளா போலீசாரால் 1954இல் புதுக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து 1956 நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது. இந்த நாளை ஆண்டு தோறும் மொழிப் போராட்ட தியாகிகளும் பல்வேறு அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் கொண்டாடி வருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் தான் இந்த தினத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து இந்த தியாக நாளுக்குப் பெருமை சேர்த்தார்கள். அதுமட்டுமின்றி நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணிக்கு மணி மண்டபம் கட்டி மேலும் பெருமை சேர்த்தார்கள்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்டம் உதயமானதைக் கொண்டாடும் வகையில் குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67வது ஆண்டு விழா கொண்டாட்டம்

இதைும் படிங்க:பரளியாற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி பலி

ABOUT THE AUTHOR

...view details