தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2020, 9:13 PM IST

ETV Bharat / state

குமரியில் மேலும் ஆறு பேருக்கு கரோனா அறிகுறி

கன்னியாகுமரி: மாவட்டத்தில் மேலும் ஆறு பேருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

குமரியில் மேலும் ஆறு பேருக்கு கரோனா உறுதி
குமரியில் மேலும் ஆறு பேருக்கு கரோனா உறுதி

குமரி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதிலும் இருந்து 16 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் 13 பேருக்கு நோய் குணமாகி ஒருவர் பின் ஒருவராக வீடு திரும்பினர். இறுதியாக மூன்று பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் நோய்த் தொற்று குறைந்து இருப்பது தெரியவந்தது. இன்று நடைபெறும் இறுதி பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மேலும் ஆறு பேருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்களில் நான்கு பேர் சமீபத்தில் மும்பையிலிருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதேபோல் குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கும் நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்ததும் சுகாதாரத் துறையினர், அவர்கள் அனைவரையும் உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ரத்தம், சளி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இவர்களுக்கு நோய் உறுதியானால் தொடர்ந்து இவர்கள் கரோனா வார்டில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களில், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகா டூ ராஜஸ்தான்... புலம்பெயர் தொழிலாளர்கள் நடுவழியில் சிக்கிய அவலம்

ABOUT THE AUTHOR

...view details