கன்னியாகுமரியை அடுத்த ரஸ்தாகாடு கடலில் எட்டு சிவலிங்கங்கள் கரை ஒதுங்கிக் கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் அஞ்சுகிராமம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலின் பேரில், அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர், கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் கரை ஒதுங்கிக் கிடந்த சிவலிங்கங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த சிவலிங்கங்கள் மரத்தினால் செய்யப்பட்டவை எனவும் அவை சுமார் ஒன்றரை அடி உயரமுள்ளதாகவும் தெரியவந்தது. பின்னர், இந்த லிங்கங்களை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிவலிங்கங்கள் இந்த சிவலிங்கங்கள் ஏதேனும் கோயிலில் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் கடலில் போடப்பட்டிருக்கலாம் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.