கன்னியாகுமரி: களியல் பகுதியைச்சேர்ந்தவர் செல்வன். இவர் அந்தப்பகுதியிலுள்ள சந்திப்பில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றிரவு (ஆக. 21) கடையை மூடிவிட்டு வீட்டிற்குச்சென்ற நிலையில் இன்று (ஆக.22) அதிகாலை டாரஸ் லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வந்து கடையை இடித்து தள்ளி, கடைக்குள் ஜல்லிகளைத் தட்டிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனை கடையின் எதிர்புறம் வாடகை வீட்டில் வசிக்கும் கடை ஊழியர் கண்டு, செல்வனுக்குத் தகவல் தெரிவித்தார். இதனைக்கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடி வந்த செல்வன், கடையைத் திறந்து பார்த்தபோது கடையின் வெளியே அதே பகுதியைச்சேர்ந்தவரான கமலைய்யன் (65), அஜின் மற்றும் அவரது மாமனார் ஆகியோர் சேர்ந்து கடைக்குள் புகுந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக செல்வனை குத்தினர்.
இதனை அந்தப்பகுதியில் இருந்த காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததாகத் தெரிகிறது. முன்விரோதம் காரணமாக,இத்தாக்குதல் முடிந்தவுடன் காவல் அலுவலர் ஒருவர் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை விடுவித்து, செல்வனை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.