கரோனா பெருந்தொற்று பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்த சிகைத் திருத்தும் கடைத் தொழிலாளர்கள் வறுமையின் விளிம்பில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்றாட செலவுகளுக்கே அல்லல்படும், தங்களுக்கு கடை திறக்கும் அனுமதியை பெற்றுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்ட உடலுழைப்பு மற்றும் சவரத் தொழிலாளர்கள் சங்கத்தினர், சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில், “சிகைத் திருத்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அரசு நலவாரியம் மூலம் அறிவித்த உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை. அதனை விரைந்து பெற்றுத்தர வேண்டும்.
கரோனா பாதிப்பினால் 45 நாள்களுக்கும் மேலாக சிகைத் திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால், தமிழ்நாடு முழுவதும், போதிய வருமானமின்றி திண்டாடுகின்றனர். அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை.
அரசு நலவாரியம் மூலம் வழங்குவதாக அறிவித்த எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே, சிகைத் திருத்தும் தொழிலாளர் ஒருவர் போதிய வருவாய் இல்லாததால், தற்கொலை செய்துகொண்டார்.
எனவே, சிகைத் திருத்தும் கடைத் தொழிலாளர்களின் தற்கொலையைத் தடுக்க சலூன் கடைகளைத் திறக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: எங்கே சென்றீர்கள் மம்தா பானர்ஜி? பாஜக கேள்வி