கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், ஓட்டல்,டேங்கர் லாரி வைத்து வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவர், டீக் கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது கண்ணன், பிரபு என்பவர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அவர்கள், இரிடியம் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகி தொழில் சிறக்கும் என்று அரவிந்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி அரவிந்த் முதலில் ரூபாய் 25 ஆயிரம் கொடுத்துள்ளார், பின்னர் ஓட்டலுக்கு அழைத்து சென்று அவரிடம் ஒரு பித்தளைக் குடத்தைக் காண்பித்து உள்ளே இரிடியம் இருப்பதாகவும், கையை உள்ளே விட்டு பார்க்குமாறும் கூறியுள்ளனர். அரவிந்துக்கு ஒருவித அதிர்வு ஏற்பட்டதும், இரிடியம் இருப்பதாக நம்பியுள்ளார். உடனே, அவர்களிடம் அரவிந்த் குடத்தைக் கேட்க, இந்தக் குடம் வேறு ஒருவருக்கு, மீதி பணம் கொடுத்தால் அடுத்த குடம் உனக்கு எனக் கூறி மேலும் 25 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.
இரிடியம் என்று பித்தளைக் குடத்தைக் காட்டி பல கோடி ரூபாய் மோசடி - இரிடியம்
கன்னியாகுமரி : ’சதுரங்க வேட்டை’ பட பாணியில் இரிடியம் எனக்கூறி பித்தளைக் குடத்தை காட்டி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவிலை சேர்ந்த பிரபல ரவுடி பிரபு உட்பட 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில், சில நாட்கள் கழித்து அவர்களிடம் இரிடியம் கேட்டபோது, காரணம் சொல்லி காலம் தாழ்த்தியிருக்கிறார்கள். அதன்பிறகு அவர்களின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்த், இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன், அடிப்படையில் மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் குமுளியை சேர்ந்த நாகராஜன், நாகர்கோவிலை சேர்ந்த சதீஸ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து இரிடியம் எனக்கூறி புத்தகத்தை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 57 பவுன் தங்க நகைகள், 14 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது. இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.