தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் 70 காவலர்கள் கரோனாவால் பாதிப்பு… - seventy policemen affected corona virus

கன்னியாகுமாரி: நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

seventy policemen affected corona virus in kanniyakumari
seventy policemen affected corona virus in kanniyakumari

By

Published : Jul 26, 2020, 7:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இடலாகுடியைச் சேர்ந்த 71 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது.

நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் இரண்டு காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதையடுத்து. காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்தது.

ABOUT THE AUTHOR

...view details