தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை - sub inspector case in kumari

கன்னியாகுமரி அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து குழித்துறை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை
உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை

By

Published : Oct 27, 2022, 9:59 AM IST

கன்னியாகுமரி:மார்த்தாண்டம் அருகே கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மெர்சி ரமணி பாய், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 4 நீரோடி துறை மீனவ கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது இரும்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கும்பலை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அக்கும்பல், உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுதொடர்பான வழக்கு குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

இந்நிலையில், “காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ஏழு பேருக்கும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் மற்றும் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் என மொத்தம் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆண் நண்பருடன் பழகிய மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை

ABOUT THE AUTHOR

...view details