தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் சேவா பாரதி அமைப்பு - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

கன்னியாகுமரி: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 500 பேருக்கு சேவா பாரதி அமைப்பு சார்பில் தினமும் இலவசமாக உணவு வழங்கப்பட்டுவருகிறது.

உணவு வழங்கும் சேவா பாரதி அமைப்பு
உணவு வழங்கும் சேவா பாரதி அமைப்பு

By

Published : Apr 20, 2020, 3:13 PM IST

உலகை உலுக்கு கரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருள்கள் சரிவரக் கிடைக்கப்பெறாமல் தவித்துவருகின்றனர்.

அதன் காரணமாக ஆங்காங்கே தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் அவர்களுக்கு உணவுகள், அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகின்றனர்.

உணவு வழங்கும் சேவா பாரதி அமைப்பு

அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட சேவா பாரதி அமைப்பினர் தோவாளை, பூதப்பாண்டி, தாழக்குடி, அழகியபாண்டியபுரம் சுற்றுட்டாரப் பகுதிகளில் 500 ஏழை எளிய மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தினமும் உணவு வழங்கிவருகின்றனர்.

இதையும் படிங்க:சேலம் அம்மா உணவகங்களில் அதிமுக சார்பில் முட்டையுடன் கூடிய இலவச உணவு!

ABOUT THE AUTHOR

...view details