கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! - களியக்காவிளையில் 5 டன் ரேஷன் அரிசு பறிமுதல்
கன்னியாகுமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், ஒருவரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
seized
தமிழ்நாடு-கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மினி லாரி ஒன்று தார்ப்பாய் மூடியபடி சரக்கு ஏற்றிவந்தது. காவலர்கள், அந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டபோது அதில் வெங்காய மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆனால், ஓட்டுநரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த காவலர்கள், அந்த மூட்டைகளின் அடிப்பகுதிகளில் உள்ள சாக்கு மூட்டைகளைச் சோதனை செய்தனர். அப்போது அதில், சுமார் ஐந்து டன் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கேரளாவுக்கு நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்திவந்த அதன்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.