கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் வெட்டுமணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அந்த வாகனம் நிற்காமல் விரைந்து சென்றது. இதைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் வைத்து அந்த சொகுசு வாகனத்தை மடக்கி பிடித்தனர்.
அப்போது ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர்கள் வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அலுவலர்கள் பறிமுதல் செய்த அரிசியை காப்புக்காடு அரசு அரிசி கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பியோடிய ஓட்டுனரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.