தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-சேவை மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு - kanniyakumari district news

கன்னியாகுமரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

By

Published : Oct 6, 2020, 2:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக மனுநீதி நாள் நடைபெறவில்லை. இதேபோல் விவசாயிகள், மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் நடத்தப்படவில்லை.

மேலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இ-சேவை மையங்கள் மூலம் ரூ.10 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் மட்டும் மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் செலுத்தி மனுக்களை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் குவிந்து மனு அளித்து வருவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மருத்துவர் சமுதாய மக்கள் மனு

ABOUT THE AUTHOR

...view details