குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கடல் அலைகள்
குமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அலைகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அழிக்கால் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும். இங்கு சாதாரண கடல் சீற்றம் ஏற்பட்டாலே கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும்.
இந்நிலையில் இன்று மாலை முதல் அப்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் ஆக்ரோஷமாக எழுந்து ராட்சத அலைகள் தடுப்பு வேலிகளை அகற்றி கொண்டு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
இதனால் மக்கள் கடல் நீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து பாதுகாப்பை ஏற்படுத்துகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் கடல்நீர் புகுந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.