கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை சாரல் மழை பெய்தது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.5 மீட்டர் முதல் 3.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
அரபிக்கடல் பகுதியில் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு - அரபிக்கடல்
கன்னியாகுமரி : அரபிக்கடல் பகுதியில் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதியில் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு
மேலும், புதன்கிழமை வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், 4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.