கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய ரோபோ சங்கம் சார்பில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில், ரோபோ மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நாகர்கோவிலில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல் - நாகர்கோவில்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இந்தியன் ரோபோ சங்கம் சார்பில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் ரோபோ மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு நவீன உலகில் ரோபோக்களின் பயன்பாடு, காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு, சாலைகளில் வாகனங்கள் வரும்போது காது கேட்காதவர்களுக்கு அதனை உணர செய்யும் வகையில் நவீன கருவிகள் உள்ளிட்ட தங்களின் பல்வேறு அறிவியல் படைப்புகளை செய்முறை விளக்கங்களுடன் வெளிப்படுத்தினர்.
இளம் மாணவ மாணவியர்களின் இந்த திறமைகளை பார்த்து அனைவரும் பாராட்டினர். அறிவியல் கண்காட்சியை குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள பார்வையிட்டனர்.