தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்: ஆசிரியை கொடூரத் தாக்குதல்! - ஆசிரியர் கைது

கன்னியாகுமரி: கருங்கல் அருகே காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் எனக் கூறி, டியூஷன் சென்டர் ஆசிரியை ஒன்றாம் வகுப்பு சிறுமி மீது கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

school girl

By

Published : Sep 21, 2019, 10:18 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதலங்களில் 5 வயது மதிக்கத்தக்க பள்ளி சிறுமியின் முதுகில் கம்பால் அடிக்கப்பட்டதில் ஏற்பட்ட ரத்தக் கட்டும், கை விரல் கிழிந்த நிலையில் காணப்படும் படங்கள் வெளியானது. சமூக வலைதலங்களில் வைரலாகும் படத்தில் காணப்படும் அந்த மாணவி பெத்தேல்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருவதும் தெரியவந்தது.

நேற்று பள்ளி சென்ற சிறுமி கடுமையான உடல் வலியால் தேர்வெழுத முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது. அச்சிறுமியிடம் பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த போது, சிறுமி தாயாரின் தோழி டியூஷன் சென்டர் நடத்தி வருவதாகவும், அந்த டியூஷன் சென்டரில் படிக்கச் செல்லும் தான் கடுமையான முறையில் தாக்கப்பட்டது குறித்த தகவல்களைத் தெரிவித்தார்.

இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குமுதா தலைமையிலான அலுவலர்கள், போலீசார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சிறுமி படித்த பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதற்காக, நேற்று முன்தினம் பள்ளியில் தேர்வு எழுதியபோது அறையிலேயே மயங்கி விழுந்ததாகவும், டியூசன் ஆசிரியை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று துன்புறுத்தி ஸ்டீல் அகப்பை, கம்பால் தாக்கியதாகச் சிறுமி தங்களிடம் தெரிவித்ததாக ஆசிரியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமி என்றும் பாராமால் கொடூரமாகத் தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details