கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திலும் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியவர், "பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள் கொண்டுவந்துள்ளார்.
பரப்பரையின் போது எழுதி வைத்ததையும் தவறாக படிப்பவர் ஸ்டாலின் - சரத்குமார் விமர்சனம்
கன்னியாகுமரி: திமுக பொதுக்கூட்டங்களில் எழுதி வைத்தும் தவறாக படிப்பவர் மு.க. ஸ்டாலின் என கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிருமான சரத்குமார் விமர்சித்துள்ளார்.
மேம்பாலங்கள் நான்கு வழி சாலைகள் அவரது முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவருக்கு வாக்களித்தால் மாவட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்வார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஒரு மிகப்பெரிய கூட்டணி அமைந்துள்ளது. இதுவே அதிமுகவிற்கு கிடைத்த முதல் வெற்றி. திமுக பொதுக்கூட்டங்களில் எழுதி வைத்து படித்தாலும் தவறாகவே படிக்கிறார் என விமர்சனம் செய்தார். திமுக தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் சந்தர்ப்பவாத கூட்டணி" என்றார்.
தொடர்ந்து பேசியவர், "திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கேரளா வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் காங்கிரசை ஆதரித்து வருகின்றனர். இதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி. ராகுல் காந்தியை பிரதமர் என ஸ்டாலின் மட்டுமே இந்தியாவில் கூறுகிறார். ஆனால், காங்கிரஸ் அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுக்கிறது. எனவே அதிமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் கொள்கை அளவில் மாறுபட்டிருந்தாலும் இந்தியாவில் ஒரு நிலையான பெரும்பான்மை ஆட்சி வந்தால் தான் நாட்டின் பாதுகாப்பு தமிழ் நாட்டிற்கு தேவையான அதிக திட்டங்களும் பெறமுடியும். எனவே வாக்காளர்கள் அனைவரும் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என தெரிவித்தார்.