தமிழ்நாடு

tamil nadu

கடலில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டும் தூய்மை பணியாளர்கள் - வைரலாகும் வீடியோ

By

Published : Dec 13, 2022, 11:15 AM IST

கன்னியாகுமரி கடலில் பிளாஷ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தள்ளு வண்டியில் எடுத்து வந்து கொட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Etv Bharatகன்னியாகுமரி கடலில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டும்  தூய்மைப்பணியாளர்கள் - வைரலாகும் வீடியோ
Etv Bharatகன்னியாகுமரி கடலில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டும் தூய்மைப்பணியாளர்கள் - வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரி கடலில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டும் தூய்மைப்பணியாளர்கள் - வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரி: குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தேங்கும் பிளாஷ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றிச் சுத்தப்படுத்தும் பணியில் மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு சார்பில் நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் பிளாஷ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை முறையாக திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்பாமல் கடலில் கொட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் தாங்கள் சேகரித்த பிளாஷ்டிக் கழிவு மற்றும் குப்பைகளைத் தள்ளு வண்டியில் எடுத்து சென்று கடலில் கொட்டும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ சமுக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் வீடியோ எடுத்த வாலிபர் தூய்மை பணியாளர்களிடம் பஞ்சாயத்திலிருந்து எடுத்து செல்ல மாட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எரிக்க முடியாததால், கடலில் கொட்டுவதாகவும் அலுவலகத்தில் சொல்வதை நாங்கள் செய்கிறோம். நீங்கள் ஆபிசில் வந்து சொன்னால் வேறு ஏதாவது செய்வார்கள் எனவும் கடல் சுத்தமாக இருந்தால் எங்களுக்கும் நல்லதுதான் என அந்த தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் ,துறைமுக மேலாண்மை குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வழக்கை இழுத்தடிக்க தேவையற்ற மனு தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம் - ஐகோர்ட் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details