கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியின் வடக்கு ரதவீதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. அங்கு செல்ல பாதை இல்லாமல் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும் அதை அகற்றவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த நினைவு மண்டபத்துக்குச் செல்ல வசதியாக தடுப்புச் சுவரை இடித்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதை அமுல்படுத்துவதற்காக நேற்று மாலை அந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியன் பிடிஒ புஷ்பலதா தலைமையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்து, வருவாய் அலுவலர் இப்ராகிம், கிராம நிர்வாக அலுவலர் சிவராகுல் ஆகியோர் தலைமையில் புல்டௌசர் உதவியுடன் தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ஜனா.யுகேந்த் கூறுகையில், எங்கள் பட்டா இடத்தில் உள்ள தடுப்புச் சுவரை இடிக்கக்கூடாது. இடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறினார்.