கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி பெருவிழா - திராளான பக்தர்கள் பங்கேற்பு
நாகர்கோவில்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அய்யாவைகுண்டசாமி தலைமைப்பதி
இந்த வருடம் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருகொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி படுதலும், அதனைத் தொடர்ந்து காலை ஆறு மணிக்கு திருநடை திறந்து திருவிளக்கு ஏற்றுதல் பணிவிடையும், 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.
திருக்கொடியை பாலபிரஜாபதி அடிகளார் ஏற்றிவைத்தார். இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .