நாகர்கோவில் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாகவே அனைத்து வார்டுகளிலும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலைகளை சீரமைக்காததால் தினமும் விபத்துகள் ஏற்பட்டு தொடர் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டும் குழியுமான சாலைகள்! - சமக போராட்டம்! - தலைமை தபால் நிலையம்
கன்னியாகுமரி: குண்டும் குழியுமான சாலைகளால் தொடர் உயிர் பலி ஏற்படுவதை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
protest
எனினும் இதுவரை சாலைகள் செப்பனிடப்படவில்லை. இதனைல் கண்டித்தும் உடனடியாக சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் இன்று, நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: எட்டு வழிச் சாலை குறித்து பேசிய முதலமைச்சர்: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!