தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் துருப்பிடித்த கல்கிரஷர் இயந்திரங்கள்: வேதனையில் உரிமையாளர்கள்

குமரி: சுமார் 120 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படாததால் கல்கிரஷர் இயந்திரங்கள் துருப்பிடித்து உடனடியாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கல்கிரஷர் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

stone crusher plant special story  குமரி மாவட்டச் செய்திகள்  கல்கிரஷர் தொழிற்சாலை  அழகப்பபுரம்
ஊரடங்கால் துருப்பிடித்த கல்கிரஷர் இயந்திரங்கள்; வேதனையில் உரிமையாளர்கள்

By

Published : Aug 8, 2020, 8:36 PM IST

கருங்கற்களை உடைத்து ஜல்லி, எம்.சாண்ட் பொடியாக மாற்றி விற்பனை செய்யும் கல்கிரசர் தொழில் இந்த ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 நாட்களுக்கும் மேலாக இயந்திரங்கள் இயக்கப்படாததால் அவை உடனடியாகப் பயன்படுத்த முடியாத அளவிற்கு துருப்பிடித்து காணப்படுகின்றன. மேலும், கல்சிரசர் இயந்திரங்கள் வாங்குவதற்கு பல லட்சம் வங்கிகளில் கடன் பெற்றுள்ள உரிமையாளர்கள் அதற்கு வட்டிகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதேபோல், கிரஷரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து குமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்த கல்கிரஷர் ஆலை உரிமையாளர் பீட்டர் ராபின் பேசியபோது, "நான் கடந்த சில ஆண்டுகளாக கல்கிரஷர் தொழில் நடத்திவருகிறேன். கற்களை உடைத்துப் பொடி செய்வதற்கு தேவையான மிகப் பெரிய இயந்திரங்களை வங்கியில் கடன் பெற்று பயன்படுத்தி வந்தேன்.

ஊரடங்கால் சுணங்கிய கல்கிரஷர் தொழில்

தொழில் நன்றாக இருந்தது. இதனால் அனைத்தும் சுமுகமாக சென்றது. வங்கி கடனையும் சிறிது சிறிதாக கட்டி வந்தேன். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 120 நாட்களுக்கு மேலாக தொழில் சுத்தமாக நடைபெறவில்லை. இதனால் வங்கிக்கு வட்டி பணம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இயந்திரங்கள் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறியுள்ளது.

சுணங்கிய கல்கிரஷர் தொழில்

இதனைச் சரிசெய்து பழைய நிலைக்கு கொண்டுவந்து மீண்டும் இயக்குவதற்கு பல லட்சம் தேவைப்படும். அதேபோல் எனது ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

எனவே அரசு வங்கி கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வதுடன், மின்சாரக் கட்டணத்தையும் ரத்து செய்தால் இந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியும். அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது நிவாரண உதவி வழங்க முயற்சிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியால் கடனாளியான காவலர் தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details