தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரப்பர் தோட்ட கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - ரப்பர் தோட்ட கழக பணியாளர்கள்

கன்னியாகுமரி: உரியகாலத்தில் சம்பளம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டக் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள்  ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ரப்பர் தோட்டம்
ரப்பர் தோட்டம்

By

Published : Sep 18, 2020, 7:44 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிப்பாறை பகுதியில் அரசு ரப்பர் தோட்ட கழக தொழிற்கூடம் இயங்கிவருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

இவர்களுக்கு நிர்வாகம் சார்பாக போதிய மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை என்றும் உரிய காலத்தில் சம்பளம் வழங்கபடவில்லை எனக் கோரியும் அரசு ரப்பர் தோட்ட கழக நிர்வாகத்தைக் கண்டித்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று (செப்டம்பர் 18) ஒருநாள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மாதத்தின் ஒன்றாம் தேதியிலிருந்து 7ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details