தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்: எச்.வசந்தகுமார் - காங்கிரஸ் வேட்பாளர்

கன்னியாகுமரி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று, குமரி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் உறுதியளித்துள்ளார்.

எச்.வசந்தகுமார்

By

Published : Apr 2, 2019, 8:14 PM IST

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், குமரி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கன்னியாகுமரி மாவட்டத்தில்ரூ.40 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குமரி தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், உண்மைக்கு புறம்பாக பேசி வருவதாகவும், அந்தப் பணம் எப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக வாக்குறிதி அளித்துவிட்டு, தற்போது பக்கோடா விற்று தொழில் செய்யுங்கள் அல்லது வாட்ச்மேனாக பணியாற்றுங்கள் என்று கூறியதை சுட்டிக்காட்டினார்.

எச்.வசந்தகுமார்

இதையடுத்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களை தொகுதியில் தான் வெற்றி பெற்றால் ராகுல் அறிவித்த இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று எச்.வசந்தகுமார் உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details