கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதியதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கான புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுவந்தது. இந்தக் கட்டடத்தின் பணிகள் நிறைவுபெற்று தற்போது திறந்துவைக்கப்பட்டது.
இந்த தமிழ்நாடு கூட்டுறவுக் கடன் சங்கத்தின் புதிய அலுவலகத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்துவைத்தார்.
மயிலாடியில் நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டட திறப்பு விழா மேலும் இந்த விழாவில் மூன்று சுய உதவி குழுக்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் கடன் உதவிக்கான காசோலையும் ஐந்து நபர்களுக்கு கறவை மாடு வாங்க கடனாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.1.25 லட்சம் செலவில் மயிலாடிப்பகுதியில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.