தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆள் இல்லாத விமானம் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம் - awareness

கன்னியாகுமரி:  குலசேகரம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆள் இல்லாத விமானம் பறக்கும் விதம், ஏவுகணை, ரோபோ ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

விழிப்புணர்வு முகாம்

By

Published : Aug 6, 2019, 6:56 PM IST

கோவை நேரு கல்வி குழுமம், ஏ. பி.ஜே. அப்துல் கலாம் விஷன் அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் செயல்திறன் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் செயல்திறன் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஆள் இல்லாத விமானம் எப்படி இயங்கிறது - விழிப்புணர்வு முகாம்

அதில், ஆள் இல்லாத சிறு விமானம், ஹெலிகாப்டர் பறக்கும் விதம், ஏவுகணை-ரோபோக்களின் செயல்பாடுகள் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நினைவுப் பரிசாக அக்கினி சிறகுகள் புத்தகம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details