கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அமலன்(47). இவர் அப்டா மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து, இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் வழி மறித்து, அரிவாளை காட்டி பணம் தருமாறு கேட்டனர்.
பின்னர், அமலனின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு, சட்டை பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம், செல்போனை பறித்து விட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து, அமலன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது!
கன்னியாகுமரி: சாலையில் செல்லும் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
விசாரணையில், நாகர்கோவில் அருகே உள்ள ஆனை பொத்தை பகுதியை சேர்ந்த சுபாஷ், அவரது நண்பர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஜாய்ஸன் ஆகியோர் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. தேடப்பட்ட நிலையில், பதுங்கியிருந்த சுபாஷ், ஜாய்ஸன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி ஆக்ஸி மீட்டர் செயலிகள் மூலம் திருடப்படும் வங்கிக் கணக்கு விவரங்கள்