கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் முட்டைக்காட்டில் முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு அங்கு வந்த கொள்ளையர்கள், அங்குள்ள சிசிடிவி கேமாராக்களை நீண்ட கம்புகள் மூலம் திசைத்திருப்பி வைத்தனர். அதன்பின், அலுவலகத்தின் பக்கவாட்டு சுவரிலிருந்த ஜன்னல் கம்பிகளை பிளேடால் அறுக்க முயற்சித்துள்ளனர். அதனால் நிறுவனத்தின் பாதுகாப்பு அலாரம் ஒலிக்க தொடங்கியது. அதைக்கேட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
கொள்ளை முயற்சியின்போது அலாரம் ஒலித்ததால் பலகோடி மதிப்பிலான தங்கநகைகள் தப்பியது! - முத்தூட் பைனான்ஸ் கிளையில் கொள்ளை முயற்சி:
கன்னியாகுமரி: முட்டைக்காட்டில் உள்ள முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் கிளையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பிச் சென்றுள்ளனர்.
![கொள்ளை முயற்சியின்போது அலாரம் ஒலித்ததால் பலகோடி மதிப்பிலான தங்கநகைகள் தப்பியது! muthoot-finance](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6154375-thumbnail-3x2-l.jpg)
இந்த அலாரத்தினால் மதுரை முத்தூட் பின் கார்ஃப் தலைமை அலுவலகத்தின் பாதுகாப்பு அலாரமும் ஒலித்துள்ளது. அதனால் அங்கிருந்தவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் அங்குவிரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக காவல்துறையினர் சுற்றுவட்டார சிசிடிவி பதிவுக்காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு அலாரம் ஒலித்ததால் வாடிக்கையாளர்களின் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் தப்பியுள்ளது.
இதையும் படிங்க:மின்வாரிய ஊழியர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை!