கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருந்து இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இரவிபுதூர்கடை அருகே சென்ற போது, எதிரே தக்கலை நோக்கி வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாலை விபத்து - 2 பேர் பலி - kaniyakumari
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இரவிபுதூர்கடை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாலை விபத்து - 2 பேர் பலி
இதில், இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழக கேரள எல்லையான பனச்சமூடு பகுதியை சேர்ந்த அனிஷ் (25 ), கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த அஜய் (25) ஆகிய இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து தொடர்பாக காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவு' - கொந்தளிக்கும் கோபன்னா