தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக மணல் அள்ளும் சமூக விரோதிகள்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை கண்டித்து போராட்டம் நடத்தவிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மணல்

By

Published : Jun 19, 2019, 9:21 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம், ஈத்தங்காடு, வழுக்கம்பாறை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுகணக்கான குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களில் தற்பொழுது தண்ணீர் இல்லாததை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சட்டவிரோதமாக மணல் அள்ளிவருகின்றனர்; மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதற்கு அரசு அலுவலர்களும் துணைபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சமூக விரோதிகள் சட்ட விரோதமாக மணல் அள்ளுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் இதனைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details