தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையோர மக்களுக்கு முகக் கவசம் வழங்கிய வருவாய் அலுவலர்கள் - கரோனா செய்திகள்

கன்னியாகுமரி: கரோனா தடுப்பு நடவடிக்கையாக சாலையோர மக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்கள் இலவசமாக முகக் கவசம் வழங்கினர்.

-kanniyakumari
-kanniyakumari

By

Published : Mar 23, 2020, 5:25 PM IST

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கேரளாவில் கரோனா தாக்கம் அதிமாகயிருப்பதால், அதனருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிறப்பு வார்டை அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் வழங்கி வருவாய் அலுவலர்கள்

சாலையில் செல்லும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டதில் உள்ள சாலையோர ஏழை மக்களுக்கு வருவாய் அலுவலர் மயில் தலைமையில் அரசு அலுவலர்கள் இலவச முகக் கவசங்கள் வழங்கினர்.

மேலும், மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'புதியதாக உற்பத்தி செய்யும் முக கவசம் பயன்பாட்டுக்கு வரும் போது விலை குறைக்கப்படும்'

ABOUT THE AUTHOR

...view details