கன்னியாகுமரி அடுத்து முட்டம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த கில்பர்ட் (41) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு உள்ளது. இதில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேர் உள்பட ஒரே விசைப்படகில் 19 மீனவர்கள் கடந்த 22ஆம் தேதி முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் குறைந்த பட்சம் பத்து நாட்கள் முதல் 25 நாள்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இரவு ஆழ்கடலில் ஏற்பட்ட பயங்கர சூறைக்காற்றில் விசைப்படகு சிக்கி மீள முடியாமல் விசைப்படகு கடலில் மூழ்கியது.
மீனவர்கள் படகை மீட்க முடியாமல் படகில் இருந்து கடலில் குதித்து 19 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நிகார் என்ற இன்னொரு விசைப்படகு இவர்கள் உயிருக்கு போராடுவதை கண்டு உடனடியாக வந்து 19 பேரையும் உயிருடன் மீட்டு இன்று (செப்.25) முட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் கொண்டு வந்து சேர்த்தனர்.
சூறைக்காற்றில் படகு மூழ்கியதில் நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் மீட்பு 19 மீனவர்கள் நடுக்கடலில் கப்பல் படகு மூழ்கி உயிருக்கு போராடுவதை அறிந்த முட்டம் மற்றும் குளச்சல் உள்ள கடற்கரை கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தாலும் அவர்கள் மீட்கப்பட்டு உயிருடன் வந்ததால் கடற்கரை கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு