தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துளையில் சிக்கி பரிதவித்த தெரு நாய்..பத்திரமாக மீட்பு - கன்னியாகுமரி தீயணைப்புத்துறை

வீட்டு சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய விடிய பரிதவித்த தெரு நாயை, கன்னியாகுமரி தீயணைப்புப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 18, 2022, 5:28 PM IST

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் லெட்சுமிபுரத்தில் நேற்று முன்தினம் (அக்.16) சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று, அங்குள்ள ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுவரிலிருந்த துளையில் தலையை விட்டு சிக்கியது. தொடர்ந்து, தலை வெளிப்பக்கமாகவும் உடல் உள்பக்கமாகவும் மாட்டியபடி, வெளியே வர முடியாமல் தவித்த நாய் பரிதவிப்புக்கு உள்ளாகியது.

வீட்டு சுவரின் துளைக்குள் தலையை விட்ட நாய்..

ஒரு கட்டத்தில் தலையை வெளியே எடுக்க பலமாக முயற்சி செய்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தமும் வடிந்தது. இதனால் தப்பிக்க முடியாமல் இரவு முழுவதும் சுற்றுச்சுவர் துளையிலேயே பரிதவித்த அந்த நாயின் நிலையைக் கண்ட வீட்டின் உரிமையாளர் பிரதாப் நேற்று காலையில் தீயணைப்புத்துறையினருக்கு தகவலளித்தார்.

துளையில் மாட்டிக் கொண்டு அவதிடையைந்த நாய்..

தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, பின் நாயை பத்திரமாக மீட்டனர். சுவரில் இருந்து வெளியே வந்த மகிழ்ச்சியில் நாய் துள்ளி குதித்தபடி மகிழ்ச்சியுடன் ஓடியது அங்கிருந்தவர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு பாரட்டுகள்..

இதையும் படிங்க: 'ரூ.230 கோடி மதிப்புடைய மருந்துகள் கையிருப்பு' - தீபக் ஜேக்கப்

ABOUT THE AUTHOR

...view details