தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைக்க கோரிக்கை! - Request to revamp Kanyakumari bus station

கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலாத் தலத்தில் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையிலிருக்கும் கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kanyakumari bus station
Kanyakumari bus station

By

Published : Dec 9, 2019, 7:06 PM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கடந்த 27 ஆண்டுகளுக்கு குமரி பேருந்து நிலையத்தை சர்வதேச அளவில் அமைக்க வேண்டும் என எண்ணி, முன்பு மிகவும் அழகான முறையில் பொழுதுபோக்கு பூங்காவுடன் இரவில் மின்னொளியில் ஒளிரும் வகையில் தெற்கு ஆசியாவிலேயே மிகவும் அழகான பேருந்து நிலையமாக அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது இந்த பேருந்து நிலையத்திற்குள், வந்துவிட்டால் பேருந்து ஆடி ஆடி துள்ளி துள்ளி பயணிகளின் வயிறு வலியெடுக்கும் நிலை உள்ளது. குறிப்பாக மழை காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பேருந்திலிருந்து இறங்கும் பயணிகள் தண்ணீருக்குள் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளதால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கேரளா, ராமேஸ்வரம் செல்வதற்கு அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவையான சுத்தமான குடிநீர், சுகாதரமான கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை.

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி பேருந்து நிலையம்

இதனால், இங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது எனவே இங்கு வரும் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு போர்கால அடிப்படையில் பேரூந்து நிலையத்தை சீரமைத்து மறுபடியும் எழில் மிகு பேருந்து நிலையமாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அங்கு பணிபுரியும் பணியாளர்கள், பயணிகள், சுற்றுலாப்பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

குமரிக்குச் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details