கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 24ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில், திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டிருந்ததால், பல்வேறு வாத்திய கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரமின்றி தவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், குமரி மாவட்ட தமிழ் கிராமிய பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்களின் செயற்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்கள் வருமானம் இல்லாமல் தவித்துவருகின்றனர். அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் எங்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மாதத்தில் ஒருநாள், ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் குறைகளைக் கேட்க நேரம் ஒதுக்கித்தர வேண்டும். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேண்ட் வாத்திய இசை நடத்த முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:ஆண் குழந்தை பிறக்க பரிகாரம் செய்வதாகக் கூறி 5 சவரன் நகையை கொள்ளையடித்த போலி சாமியார்!