கன்னியாகுமரி: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மலையில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் இருந்து கணிசமான அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறைக்கு வினாடிக்கு 967 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 448 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
அதேநேரம் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டியதாலும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.10 அடியை தாண்டியதாலும், அணையின் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து வினாடிக்கு 1,124 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.