கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தடுப்பணை தாமிரபரணி ஆற்றில் அக்.16ஆம் தேதி மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜி குமார்(30) என்பவர் குளிக்கச் சென்ற போது அடித்துச் செல்லப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அவரை குழித்துறை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். 24 மணி நேரமாகியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நான்கு தீயணைப்புத் துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது பழவார் அருகே உள்ள கப்பிளி கடவு பகுதி ஆற்றிலிருந்து உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அந்த உடல் ஷாஜி குமாருடையது என்பது தெரியவந்தது. தற்போது உடல் குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் மிதந்த உடல் - காவல்துறை விசாரணை!