கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரயில், பேருந்து, சொகுசு கார்கள், மினி வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு சர்வ சாதாரணமாக தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு சில கடத்தல்கள் மட்டுமே தடுக்கப்பட்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தடையின்றி தொடர்ந்து ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்திச் செல்கின்றனர்.
இந்நிலையில் கருங்கல் அருகே மேல குறும்பணையில் இருந்து கேரளாவிற்கு சென்ற டெம்போ வேனை சந்தேகத்தின் அடிப்படையில் உணவு கடத்தல் தடுப்புத்துறை பறக்கும் படை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.