தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேலே வாழைக்குலைகள், உள்ளே 4 டன் ரேஷன் அரிசி: லாரியை மடக்கிப் பிடித்த அலுவலர்கள் - ரேஷன் அரிசி கடத்தல்

கன்னியாகுமரி: நூதனமுறையில் ரேஷன் அரிசியை கடத்திய மினி லாரியை அலுவலர்கள் பறிமுதல்செய்துள்ளனர்.

Rice
Rice

By

Published : Nov 2, 2020, 4:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே படந்தாலுமூடு பகுதியில் விளவங்கோடு வட்டவழங்கல் அலுவலர் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வாழைக்குலை ஏற்றிவந்த கேரளா பதிவெண் கொண்ட மினி லாரியை அலுவலர் தடுத்த நிறுத்த முயன்றபோது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதனையடுத்து அலுவலர்கள் லாரியை களியக்காவிளை அருகே ஒற்றமரம் பகுதியில் வைத்து லாரியை மடக்கிப் பிடித்தனர்.

பறிமுதல்செய்யப்பட்ட லாரி

அப்போது லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அதன்பின் லாரியை அலுவலர்கள் சோதனையிட்டபோது நான்கு டன் ரேஷன் அரிசியை பதுக்கிவைத்து அதன் மேல்பகுதியில் வாழைக் குலைகளை அடுக்கிவைத்து கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து லாரியைப் பறிமுதல்செய்து விளவங்கோடு வட்டவழங்கல் அலுவலகத்தில் கொண்டுவரப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details