தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! - ரேஷன் அரிசி கடத்தல்

கன்னியாகுமரி: திட்டுவிளை பகுதியில் லாரியில் மறைத்து வைத்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Jan 6, 2021, 11:56 AM IST

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.

இந்தப் பொருள்களை சிலர் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

வாகன தணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்கள்:

இதனைத் தடுக்க , உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருடன் இணைந்து மாவட்ட வருவாய் துறை அலுவலர்களும் பறக்கும் படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் வருவாய் துறை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மறைத்தனர்.

18 டன் அரிசி மூட்டைகள் பறிமுதல்:

லாரியை நிறுத்திய ஓட்டுநர், அலுவலர்களை கண்டதும் அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த அலுவலர்கள் விருதுநகரிலிருந்து வந்த அந்த லாரியை சோதனை செய்தனர். அதில், 18 டன் அரிசி மூட்டைகள் மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்யபட்ட அரிசி மூட்டைகள் நாகர்கோவில் கோணத்திலுள்ள உணவு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:முள்புதரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details