கன்னியாகுமரி: கேரளாவிற்கு கன்னியாகுமரியிலிருந்து நியாயவிலைக்கடை அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் கடத்தல்காரர்கள் புது புது கோணங்களை பயன்படுத்தி நியாயவிலைக்கடை அரிசியை கேரளாவுக்குக் கடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.
வாகன தனிக்கையின்போது சிக்கிய லாரி:
உத்தரவின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, கேரளாவுக்கு நியாயவிலைக்கடை அரிசி கடத்திய நபர்களை பிடித்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஜூன் 25) காலை நாகர்கோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.