நெல்லை மாவட்டத்திலிருந்து ஆரல்வாய்மொழி வழியாக சுமார் 10 டன் ரேஷன் அரிசியை கடத்திக்கொண்டு, லாரி ஒன்று வந்து கொண்டிருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாரியை நிறுத்தச்சொல்லி தனிப்படையினர் கை காட்டியபோது, லாரி நிற்காமல் சென்றதால் அதனைத் துரத்திச் சென்றனர். பூதப்பாண்டி திட்டுவிளை வழியாக அழகியபாண்டிபுரம் அருகே வேகமாக சென்ற போது, திடீரென அந்த லாரி சாலையோரம் இருந்த கடையின் முன்பு கவிழ்ந்தது.
சாலையில் கவிழ்ந்த ரேஷன் அரிசி கடத்தல் லாரி! - ரேஷன் அரிசி கடத்தல்
கன்னியாகுமரி: கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
rice
கடத்தி வரப்பட்டது ரேஷன் அரிசி என்பதால் லாரியில் இருந்த டிரைவரும் கிளினரும் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தாசில்தார், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கடத்தல் ரேஷன் அரிசி குறித்து விசாரணை நடத்தினர். எங்கிருந்து இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டன என்பது பற்றி காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு இடைக்காலத் தடை!