தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுப் படகு வலையில் சிக்கிய அரியவகை நண்டு - காட்சியகத்தில் ஒப்படைப்பு - ஆஸ்திரேலியா கடல் பகுதியில் வாழும் நண்டு இனம்

கன்னியாகுமரி: வாவுத்துறை மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை நண்டு மீன் காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நாட்டு படகு வலையில் சிக்கிய அரியவகை நண்டு

By

Published : Nov 6, 2019, 7:43 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், வாவுத்துறையைச் சேர்ந்தவர் மீனவர் சாஜூ (29). இவர் தனக்குச் சொந்தமான நாட்டுப்படகில் கன்னியாகுமரி கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்பினார். பின்னர் வலையில் சிக்கிய மீன்களை எடுத்தபோது, அபூர்வ வகை நண்டு வலையில் சிக்கியிருப்பது தெரியவந்தது. தினமும் வலையில் ஏராளமான நண்டுகள் கிடைக்கும் என்றாலும் இது பார்ப்பதற்கு புதுவகையாக இருந்ததால் இதனை உயிருடன் மீட்டு கன்னியாகுமரி காமராஜர் மண்டபம் அருகேயுள்ள அக்வா மீன் கண்காட்சிக் கூடத்தில் ஒப்படைத்தார்.

அதைப் பரிசோதித்த கண்காட்சி அலுவலர் ஜெபர்சன், குயின்ஸ்லாந்து நாட்டு கடல்பகுதியில் இருக்கும் ரெட் ப்ராக் கிராப் எனப்படும் ஒருவகை நண்டு என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெபர்சன் கூறுகையில், 'ரெட் ப்ராக் கிராப்' என அழைக்கப்படும் இந்த நண்டு குயின்ஸ்லாந்தின் யெப்பூன் முதல் நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கடற்கரை வரையிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் கரையோர நீர்ப்பரப்பிலும் வாழ்கின்றன.

நாட்டு படகு வலையில் சிக்கிய அரியவகை நண்டு

இந்த நண்டுகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலும், இந்தியப் பெருங்கடல் முழுவதும் இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் ஹவாய் மற்றும் வியட்நாம் வரையிலும் காணப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் ரணினா ரனினா ஆகும். இது 150 மில்லிமீட்டர் (5.9 அங்குலம்) வரை வளரக்கூடும். மேலும் 900 கிராம் எடை வரை இருக்கும். சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும் இவை, பகல் நேரத்தில் மண்ணுக்குள் புதைந்தும், இரவு நேரத்தில் கரைப்பகுதியில் நடமாடும் இனமாகும்.

அரியவகை நண்டு இனமான இது அண்மையில் தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியிலும், கேரள மாநிலம் விளிஞ்சத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கன்னியாகுமரி கடல்பகுதியில் கிடைத்துள்ளது என்பதால் இவ்வகை இனங்கள் தமிழ்நாடு கடல்பகுதியில் அதிகமாக வசிக்கிறது என தெரியவந்துள்ளது’ என்றார்.

மீனவர் அளித்த அரியவகை நண்டான ரெட் ப்ராக் திராப்-பை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்க உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்ற விசித்திர விலங்கு!

ABOUT THE AUTHOR

...view details