இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்றுமுதல் ஆரம்பம் - கன்னியாகுமரியில் ரமலான் நோன்பு ஆரம்பம்
கன்னியாகுமரி: இஸ்லாமியர்களின் புனித நிகழ்வான ரமலான் நோன்பு கேரளாவில் இன்று தொடங்கியதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை குடும்பத்தினரோடு தங்கள் வீடுகளில் தொழுகையோடு தொடங்கினர்.
ரமலான் நோன்பு
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், ஐந்து கடமைகளில் ஒன்றாகக் கருதும் ரமலான் நோன்பை ஆண்டுதோறும் அவர்களது புனித மாதமான ரமலான் பிறை கண்டு தொடங்குவது வழக்கம்.
அதன்படி, ஆண்டுதோறும் தொடக்க நாளில் மசூதிகளுக்குச் சென்று சுபுஹூ தொழுகையுடன் தொடங்கப்பட்டுவந்த நிலையில், கேரளாவில் இன்று (ஏப்ரல் 13) நோன்பு தொடங்கியது. அதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் நோன்பை கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
இந்த நோன்பு சார்ந்த சிறப்புத் தொழுகை இஸ்லாமிய மக்களால் முப்பது நாள்கள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. வழக்கமாக மசூதிக்குச் சென்று தொழுகை மேற்கொள்ளும் நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பெரும்பாலானோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.
Last Updated : Apr 13, 2021, 2:04 PM IST