இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ஜோதி பயணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம் கன்னியாகுமரியிலிருந்து இன்று தொடங்கியது.
ஜோதிப் பயணம்:
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பிரகாசம் தலைமையில் புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு வந்து பின்பு கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ஜோதி பயணம் நடைபெறுகிறது. இதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்வார்கள்.
நிகழ்வாண்டு பயணம்:
இந்த ஆண்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு பின்பு காமராஜர் நினைவு மணி மண்டபத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு கன்னியாகுமரி ரவுண்டானாவில் அமைத்துள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஜோதி பயணமானது தொடங்கியது.
ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம் துவக்கம் பயணத்தின்போது பயங்கரவாதத்திற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பயங்கரவாதிகள் ஒழிக்கப்படவேண்டியது என காங்கிரசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த ஜோதி பயணத்தை காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இந்தப் பயணமானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, மகாபலிபுரம், சென்னை வழியாக வருகிற 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அடைகிறது.