பிரபலப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலகினரும் ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.பி.பிக்காக கைகளில் அகல் விளக்கு ஏந்தி பிரார்த்தனை செய்த ரஜினி ரசிகர்கள்! - ரஜினி ரசிகர்கள்
கன்னியாகுமரி : பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
ரஜினி ரசிகர்கள்
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று (ஆக. 21) தாணுமாலயன் சுவாமி கோயில் வாசலில் அகல் விளக்குகள் ஏந்தி, எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
இந்தப் பிரார்த்தனையில், குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தங்கம், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.